15-ஆவது பொதுத் தேர்தலில் கெடாவை மீண்டும் பாரிசான் நேசனல் கைப்பற்றும் : மஹ்ட்சீர் காலிட் நம்பிக்கை

கோலா நெராங், ஆகஸ்ட் 21 :

15-ஆவது பொதுத் தேர்தலில் கெடாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று பாரிசான் நேசனல் (BN) நம்புகிறது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மஹ்ட்சீர் காலிட் கூறினார்.

அம்னோவுக்குக் கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில் தமது கட்சிக்கும் பிஎன்னுக்கும் மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது என்றார்.

“எங்கள் நம்பிக்கை அளவு மிக அதிகமாக உள்ளது. அறிக்கைகள், செயல்பாடுகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், கெடாவை மீண்டும் கைப்பற்றும் எங்களின் லட்சியத்தை நனவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று இங்கு அதிகாரமளித்தல் மையத்தை (COME) தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த மையம், எந்தவொரு கட்டணமும் இன்றி கிராமப்புற சமூகம் பயன்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டுத் துறையின் கேமாஸ் அமைப்பு மூலம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here