குவாந்தான் MRSMல் கொடுமைப்படுத்துதல் வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் இடமாற்றம்

கூச்சிங்: சமீபத்தில் குவாந்தன் மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரியில் (MRSM) கொடுமைப்படுத்துதல் வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று துணை ஊரக வளர்ச்சி அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லா தெரிவித்தார். எம்ஆர்எஸ்எம் ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான கற்றல் மையமாக தொடர்வதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு என்றாலும், மாரா (Majlis Amanah Rakyat) மௌனம் காக்கவில்லை. மேலும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று மாரா சிறந்த சேவை விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, ஜூன் மாதம் முதல் தனது மகள் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியதாக ஒரு பெண் கூறிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், தனது மகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பிந்துலு (MRSM) அடுத்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் லாவோஸில் உள்ள (MRSM) கட்டுமானம் இப்போது டெண்டர் நடைமுறையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here