தெருவோர உணவகத்திற்கு வெளியே சண்டையில் ஈடுபட்ட ஐவர் கைது

சிபு, ஆகஸ்ட் 22 :

இங்குள்ள ஜாலான் பஹ்லவானில் உள்ள ஒரு சிறிய உணவகத்திற்கு வெளியே சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை 11 மணி முதல் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, 29 முதல் 50 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சிபு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு இந்த சண்டை நடந்தது என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் 2.15 மணிமுதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம், ஐந்து சந்தேகநபர்களும் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147 இன் படி விசாரணைக்காக சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அவரது தரப்பு நீதிமன்றத்திடம் இன்று கோரியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here