மலேசிய குடிநுழைவுத் துறையின் (இமிக்ரேஷன்) பெயரைப் பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துறையின் லோகோவைப் பயன்படுத்தி ஒரு போலி கணக்கு இருப்பதாகவும், திணைக்களத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவூட் பெயரைப் பயன்படுத்தி ஊடக அறிக்கைகளைப் பதிவேற்றுவதாகவும் துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பைப் பதிவேற்றியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தால், தேவையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
மேலும் எந்த தகவலுக்கும் துறையின் போர்டல் மற்றும் எங்கள் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தைப் பார்க்கவும் என்று திணைக்களம் பதிவிட்டுள்ளது.