நஜிப் மன்னிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 :

எதிர்காலத்தில் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்பு பெறுவதற்கு “அதிக வாய்ப்பு” இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நம்புவதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

“தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி (‘justice delayed is justice denied’)’ என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, அதை நாம் ‘ தாமதப்படுத்தப்பட்ட நீதி புறக்கணிக்கப்பட்ட நீதி (justice delayed is justice neglected) ‘ என்று மொழிபெயர்க்கலாம்.

ஏனெனில் நஜிப்பின் SRC இன்டர்நேஷனல் வழக்கு நடைபெறுவதற்கு மிக நீண்ட காலம் (4 ஆண்டுகள்) எடுத்தது. அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட பல திருட்டு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் வழக்குகள் தாமதப்படுத்தப்படுகிறது அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவது இல்லை.

“சில குற்றவாளிகள் இறந்திருக்கிறார்கள். விசாரணைகளில் தாமதம்ஏற்படுவதால் நீதி புறக்கணிக்கப்படும்,” என்று இப்போது Pejuang தலைவரும் லங்காவி சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் RM42 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதத்தை உச்ச நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உறுதி செய்ததை அடுத்து, நஜிப் காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here