85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த கே.சத்தியராஜ் குற்றவாளி என அறிவித்து மரணதண்டனை விதித்தது உயர் நீதிமன்றம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 26 :

85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேலையில்லாத ஒரு நபருக்கு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 30 வயதான கே.சத்தியராஜ் என்பவர், இறந்தவருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாகவும், சுய நினைவுடன் இருந்த நிலையில் இந்தச் செயலைச் செய்ததாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதி டத்தோ அப்துல்  கரீம் அப்துல் ரஹ்மான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றவாளி திருடும் நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் அங்கிருந்த மூதாட்டியின் கைகளை கட்டிவிட்டு, அவர் சத்தம் போடாதவாறு வாயையும் அடைத்து விட்டார். அதன் பின்னர், அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவரை கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றார் என குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here