ஆரோன்-வூய் யிக் இணையினர் உலக வெற்றியாளர் விருதினை வென்று வரலாற்று சாதனை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 :

உலக பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியாவின் இரட்டையர்களான ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடி பெற்ற வரலாற்று வெற்றிக்கு மலேசியர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கும் ஒருவர்.

“மலேசியக் கொடியை உயர்த்தியதற்கு வாழ்த்துகள்! என்றும் மலேசியாவின் பிரதிநிதிகள் பூப்பந்து உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும், மேலும் இது அனைத்து மலேசியர்களுக்கும் எங்கள் சுதந்திர தினத்துடன் இணைந்து ஒரு சிறந்த பரிசு” என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தோக்கியோ மெட்ரோபொலிட்டன் ஜிம்னாசியத்தில் நடந்த போட்டியில், மூன்று முறை உலக சாம்பியனான இந்தோனேசியாவின் முகமட் அஹ்சான்-ஹெண்ட்ரா செத்தியவான் ஜோடியை 21-19, 21-14 என்ற கணக்கில் தோற்கடித்து, உலகத் தரப்படுத்தலில் 6 ஆவது இடத்திலிருக்கும் ஜோடியான ஆரோன்-வூய் யிக் ஜோடி அபார வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here