அதிவேகமாக சென்ற காரை துரத்திச் சென்று பிடித்த போலீசார்; தம்பதியினர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 1 :

டாமான்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் (LDP) அதிவேகமாக காரை ஒட்டிச் சென்ற ஒரு ஜோடியை, துரத்திச் சென்று மடக்கிய பின்னர், அதில் பயணஞ் செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம், கடந்த செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 30) ​​மாலை 4 மணியளவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை துணை தலைவர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

“ஒரு போலீஸ் பணிக்குழு குற்றத்தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​இங்குள்ள பெர்சியாரான் சூரியன் என்ற இடத்தில் உள்ள ஒரு விடுதிக்கு அருகிலுள்ள புரோத்தோன் வாஜா காரில் ஒரு ஜோடி சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வதைக் கண்டனர்.

“போலீசார் அக்காரை நெருங்கியதும், அவர்கள் LDP நோக்கிச் சென்றனர். சந்தேக நபர் பல வாகனங்களில் மோதிய பின், ​​பண்டார் உத்தாமா அருகே யூ-டர்ன் வரை போலீஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்றனர்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதற்காக காரை விட்டு இறங்க முயற்சித்ததாகவும், ஆனால் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“வாகனத்தில் சோதனை செய்ததில், 1.3 கிராம் சியாபு போதைப்பொருள் அடங்கிய RM130 மதிப்புள்ள பாக்கெட் என நம்பப்படும் பொட்டலம் கண்டெடுக்கப்பட்ட்து” என்றார்.

“அவர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் இரு சந்தேக நபர்களும் மெத்தம்பேட்டமைனுக்கு சாதகமாக இருப்பதாகவும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக 41 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க முன்வருமாறு ஏசிபி முகமட் ஃபக்ருதீன் கேட்டுக் கொண்டார்.

தகவல் தெரிந்தவர்கள் சிலாங்கூர் காவல்துறையின் ஹாட்லைனை 03-2052 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here