விடுமுறைக்கு சென்றபோது கடத்தப்பட்ட மலேசிய பெண் கம்போடியாவில் மீட்பு..!

கோலாலம்பூர், செப்டம்பர் 2 :

கம்போடியாவில் தனது விடுமுறையை வேடிக்கையாக கழிக்க விரும்பிய மலேசியப் பெண், கடத்தப்பட்டு ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, அவர் மிக கடினமான தருணங்களை எதிர்கொண்டார்.

மலாக்கா ம.சீ.ச இளைஞர் பிரிவுத் தலைவர் டெனிஸ் லீ ஹான் லிம்மின் கருத்துப்படி, பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 15 அன்று கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, உதவிக்காக அவரைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

“பாதிக்கப்பட்ட மிஸ் கியூ ஜூலை 23 அன்று கம்போடியாவுக்குப் பயணம் செய்தார். இருப்பினும், ஆகஸ்ட் 7 அன்று அவர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​சீனப் பிரஜைகள் குழு ஒன்று அவரை வழிமறித்து கடத்தியது.

“உதவிக்காக பலமுறை கூச்சலிட்டபோதும், யாரும் அவருக்கு உதவவில்லை,” என்று லீ மேற்கோள் காட்டினார்.

அந்தக் குண்டர்கள் குழு அவளது வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் அனைத்தையும் தங்களுக்கு மாற்றும்படி வற்புறுத்தினர் அனால் பாதிக்கப்பட்டவர் அதைச் செய்ய தவறியபோது, ​​​​அவர்கள் அவளை மனித கடத்தல்காரர்களிடம் விற்பனை செய்தனர் என்றார்.

கியூ ஒரு மோசடி அழைப்பு மையத்திற்கு விற்கப்பட்டதையும், பின்னர் அவர்களுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதையும் லீ வெளிப்படுத்தினார்.

கியுவின் விவரங்களைப் பெற்ற பிறகு, லீ அவற்றை சமூக ஊடகங்கள் மூலம் ஆகஸ்ட் 21 அன்று கம்போடிய துணைப் பிரதமர் சார் கெங்கின் அலுவலகத்திற்கு விரைவாக அனுப்பியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் கம்போடிய போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மேலும் அவர் விரைவில் மலேசியாவிற்கு அழைத்து வரப்படுவார் என்றும் லீ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here