துன் மகாதீர் IJNஇல் இருந்து இல்லம் திரும்பினார்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது  இன்று காலை 9.30 மணியளவில் தேசிய இருதய கழகத்தில் (IJN) இருந்து  இல்லம் திரும்பினார்.

இந்த செவ்வாய் (செப்டம்பர் 6) வரை டாக்டர் மகாதீர் தொடர்ந்து வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி டாக்டர் மகாதீர்க்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, IJNல் கண்காணிப்பிற்காக அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here