இரு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவரின் உடல் வலையில் சிக்கியது

கோத்தா திங்கி, செப்டம்பர் 6 :

கம்போங் சுங்கை செம்பாயோங்கில், இரு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவரின் உடல் நேற்று மீன்பிடி படகின் வலையில் சிக்கியது.

33 வயதான ஃபவுசி ஹுசைன் முகமட்டின் உடல், விபத்து நடந்த கடைசி இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் பிற்பகல் 3.20 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

நடவடிக்கை அதிகாரி கமாண்டர், தீயணைப்புத் தலைவர் அல் ஹஸ்ரா முஹமட் கூறுகையில், இரண்டாவது நாள் நடவடிக்கையில் இரண்டு அலுமினிய படகுகளைப் பயன்படுத்தி இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் விழுந்ததாக நம்பப்படும் பகுதியிலிருந்து 400 மீட்டர் சுற்றளவில் மேற்பரப்பு தேடல் மற்றும் டைவிங் நுட்பங்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“கடைசியாக அவர் விழுந்தத இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ளுர் மீன்பிடி படகின் வலை ஒன்றில் சிக்கி நிலையில் பலியானவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில், காயமடைந்த மற்றொருவர் பொது வாகனத்தைப் பயன்படுத்தி தஞ்சோங் செடிலி ஹெல்த் கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், விபத்துக்குள்ளான இரு படகிலிருந்த மூன்று மீனவர்களில் 38 மற்றும் 29 வயதுடைய இருவர் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here