பாலியல் புகாரை அடுத்து பதின்ம வயது நடிகையின் தந்தை போலீசாரால் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 8 :

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இளம்வயது நடிகை அளித்த புகாரின் பேரில், அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் கெடாவில் 43 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டதாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

“சந்தேக நபரின் கைத்தொலைபேசி பகுப்பாய்வுக்காக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது” என்று வான் அஸ்லான் தெரிவித்தார்.

மேலும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் சந்தேகநபர் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திங்களன்று, 15 வயதான நடிகை தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்திருந்தார், அதில் தனது தந்தை தனது மொபைல் போனில் ஆபாச திரைப்படங்களை தனக்கு போட்டுக் காட்டியதாகவும், தனது தாய் இல்லாத சமயங்களில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here