44 கெடா மெட்ரிகுலேஷன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தில் தீ ..!

கேரிக், செப்டம்பர் 10 :

இன்று நண்பகல், இங்குள்ள பாண்டிங் அருகே 39.5ஆவது கிலோமீட்டரில் ஜாலான் ராயா தைமூர் பாராட் என்ற இடத்தில், கெடா மெட்ரிகுலேஷன் கல்லூரி (KMK) சாங்லூனில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

சம்பவத்தின் போது 44 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓட்டுநர், கிளாந்தானில் இருந்து குறித்த கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கேரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அஜிசான் அஜீஸ் கூறுகையில், தீ விபத்தின் காரணமாக பேருந்தின் 85 விழுக்காடு சேதமடைந்தது, ஆனால் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிற்பகல் 2.05 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பில் அழைப்புப் பெறப்பட்டது, உடனே தீயணைப்பு குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“அனைத்து மாணவர்களும் ஓட்டுநரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்திற்கு வெளியே வர முடிந்ததால், தீயினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அவரது கூற்றுப்படி, தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், பிற்பகல் 3.48 தீயணைப்பு நடவடிக்கை முடிந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here