நஜிப்புக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு, 1MDB விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 14 :

காஜாங் சிறையில் 12 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், தற்போது உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முதல் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அதனால் அவருக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிரான 1MDB வழக்கு விசாரணை மீண்டும் செப்.26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹமட் ஷஃபீ அப்துல்லா கூறுகையில், நஜிப் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுப் புண் காரணமாக மருத்துவமனையில் தினமும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகத, இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வேராவுக்கு தெரிவித்தார்.

“இன்று கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் மருத்துவமனையில் காத்திருந்த பிறகு நான் இறுதியாக எனது கட்சிக் காரரை சந்தித்தேன், இருப்பினும் அவர் எவ்வளவு காலம் வார்டில் இருக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியாது என்றார்.

“Jabatan Penjara வழங்கிய மருத்துவச் சான்றிதழ் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது முஹமட் ஃபர்ஹானுக்கு (நஜிப்பின் மற்றொரு வழக்கறிஞர்) வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது, அந்த மருத்துவச் சான்றிதழ் செப்.14 மற்றும் 15 ஆம் தேதிகளில் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு மருத்துவ விடுப்பு வழங்க பரிந்துரைத்துள்ளதாகவும், நஜிப் கோலாலம்பூர் மருத்துவமனையில் வார்டு 21 இல் இருப்பதாகம் கூறினார்.

மேலும் 1MDB வழக்கு விசாரணைக்கு நஜிப்பினால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், அதற்கு பதிலாக மற்றுமொரு தேதியை உயர் நீதிமன்றம் முடிவுசெய்ய வேண்டும் என்றும் நஜிப்பின் தரப்பு வழக்கறிஞரான சாஃபி விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பம் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று துணை அரசு வழக்கறிஞர் அகமட் அக்ரம் காரிப் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நீதிபதி செக்வேரா, நஜிப் துன் ரசாக் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதால் 1MDB வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

69 வயதான நஜிப், 1MDB நிதியில் இருந்து மொத்தம் RM2.3 பில்லியன் லஞ்சம் பெற, தனது பதவியைப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், அதே தொகையில் பணமோசடி செய்ததாக 21 குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here