RM400,000 மதிப்புள்ள ஊழல் மோசடி வழக்கு விசாரணையின் பொருட்டு மூவருக்கு தடுப்புக் காவல் உத்தரவு

ஈப்போ, செப்டம்பர் 14 :

அரசு நிலத்தை சொந்தமாக்குவதற்காக RM400,000 மதிப்புள்ள ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் விசாரணைக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைம் தெரிவித்துள்ளது.

நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்தின் நிர்வாக உதவியாளரான 30 வயதுடைய பெண் மற்றும் ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர்களான 41 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆண்கள் ஆகியோர், இன்று புதன்கிழமை (செப்டம்பர் 14) காலை 10.30 மணியளவில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிற லாக்-அப் ஆடைகளை அணிந்திருந்த அனைவரும், இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 17(a) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக, மாஜிஸ்திரேட் நூர் ஹபீசா இஷாக் இன்று புதன்கிழமை தொடங்கி எதிர்வரும் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 20) வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

MACC ஆதாரத்தின்படி, கிந்தா மாவட்டத்தில் சுமார் இரண்டு ஹெக்டேயர் அரசாங்க நிலத்தை சொந்தமாக்குவதற்கான விண்ணப்பத்திற்கு, அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எம்ஏசிசி பேராக் இயக்குநர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட்டைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த வழக்கில் வேறு யாராவது தொடர்புள்ளார்களா என்பதைக் கண்டறிய, தங்களது துறை மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here