பேராக்கில் கடந்த 8 மாதங்களில் 23 உணவு விஷமாதல் வழக்குகள் பதிவு

ஈப்போ, செப்டம்பர் 15 :

பேராக்கில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 23 உணவு விஷமாதலினால் 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரக் குழுத் தலைவர் முகமட் அக்மல் கமாருடின் தெரிவித்தார்.

ஆறு வழக்குகள் பள்ளிகள் சம்மந்தப்பட்டவை என்றும் எட்டு பொது உயர் கல்வி நிறுவனங்களில் மற்றும் இரண்டு வழக்குகள் தொழிற்சாலைகளிலும் தொடர்புடையவை என்று அவர் கூறினார்.

அத்தோடு தனிநபர்கள் சம்மந்தப்பட்ட சொந்த வீடுகளில் இருந்து ஐந்து வழக்குகளும், சிறையில் ஒரு வழக்கும், உணவு வழங்குபவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கும் இருப்பதாக அவர் கூறினார்.

“மாநில சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு, இந்தாண்டு ஆகஸ்ட் வரை உணவுக் கடைகளில் மொத்தம் 4,902 சோதனைகளை நடத்தியது, அதில் 30 சுகாதாரமற்ற வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டது.

இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 15) இங்குள்ள மைடின் மாலில் நடைபெற்ற மாநில அளவிலான உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை தொடங்கிவைத்த அவர் தனது உரையில், “சோதனை மேற்கொண்ட மொத்தம் 214 வளாகங்கள் 75% க்கும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றன என்றும் அவற்றில் மொத்தம் 888 வழக்கங்களுக்கு அபராதங்களும் வழங்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

பல்வேறு குற்றங்களுக்காக RM19,344 மதிப்புள்ள 1,858 உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் அக்மல் மேலும் தெரிவித்தார்.

“அது தவிர, மொத்தம் RM22,150 மதிப்புள்ள அபராதம் விதிக்கப்பட்ட 14 வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

“வீட்டில் உணவு தயாரிப்பு கூடம் உள்ளவர்கள் உட்பட அனைத்து உணவு கையாளுபவர்களும் துறையின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

“சான்றிதழ் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே உணவை ஆர்டர் செய்கிறார்கள் என்பதையும் பொதுமக்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

“சான்றிதழ்கள் உள்ளவர்கள் துறையின் ரேடாரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் எல்லா நேரங்களிலும் கண்காணிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here