பங்சாரிலுள்ள வீட்டில் கொள்ளை; மூதாட்டி காயம்

பங்சார், செப்டம்பர் 22:

நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 21) ஜாலான் மாரோஃப்பிலுள்ள அவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் அவர் காயமடைந்தார் என்று நம்பப்படுகிறது.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோரைத் தொடர்பு கொண்டபோது, அவர் குறித்த சம்பவம் தொடர்ப்பில் புகார் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

“கொள்ளைச் சம்பவத்தில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 394 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

கொள்ளை சம்பவத்தில் வயதான ஒரு பெண்மணி காயமடைந்ததாகவும், அத்தாக்குதலைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் செய்திகள் பெரிதும் பகிரப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here