போக்குவரத்து போலீஸ் அதிகாரிக்கு RM100 லஞ்சம் கொடுத்த விவசாயிக்கு, RM3,000 அபராதம்

ஈப்போ, செப்டம்பர் 22 :

கடந்த ஏப்ரலில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட அவர் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருக்க போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விவசாயிக்கு, இன்று செஷன்ஸ் கோர்ட் RM3,000 அபராதம் விதித்தது.

37 வயதான ஃபூ போ யாவ் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிபதி அஹ்மட் கமர் ஜமாலுதின் முன் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

இவ்வழக்கில் அவருக்கு RM3,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால், ஃபூ ஒரு மாத சிறைத்தண்டனையையும் எதிர்கொள்வார்.

குற்றப்பத்திரிகையின்படி, ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவில் பணியில் இருக்கும் சார்ஜென்ட் ரோஸ்லான் கான் முகமட் ஷெரீப்புக்கு ரொக்கமாக RM100 லஞ்சம் வழங்கியதாக ஃபூ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஏப்ரல் 29 அன்று அதிகாலை 1 மணியளவில் ஈப்போ IPD போக்குவரத்து அமலாக்கப் பிரிவு அலுவலகமான ஜாலான் சேம்பர்லின் உலுவில் இக் குற்றத்தைச் செய்தார்.

அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 214ன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஃபூ அபராதம் செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here