வெள்ள நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து பத்து பஹாட், பொந்தியானில் இயங்கிவந்த நிவாரண மையங்கள் மூடப்பட்டன

ஜோகூர் பாரு, செப்டம்பர் 23 :

பத்து பஹாட்டில் உள்ள SMK ஶ்ரீ காடிங் வெள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த 11 குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அந்த மையம் மூடப்பட்டது.

ஜோகூர் குடிமைத் தற்காப்புப் படையின் கூற்றுப்படி, செப்டம்பர் 14 முதல் செயல்பட்டு வந்த இந்த மையம் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) மாலை 6 மணிக்கு மூடப்பட்டது.

“இந்த மையத்தில் தஞ்சம் புகுந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் வெள்ள நீர் வடிந்த பிறகு வீடு திரும்பிய பின்னர், அது மூடப்பட்டது” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மையத்தில் இருந்து தஞ்சம் கோருபவர்கள் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், பெக்கான் ஸ்ரீ காடிங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொந்தியான் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு வெள்ள நிவாரண மையமும் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) காலை 10 மணியளவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here