அலோர் ஸ்டார், செப்டம்பர் 24 :
கடந்த வியாழக்கிழமை, தங்க நகைக் கடையில் இருந்து கைச்சங்கிலியை திருடிக்கொண்டு ஓடிய நபர், பொதுமக்கள் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார்.
டிக்டாக் செயலி மூலம் வைரலான 1 நிமிட 32 வினாடிகள் கொண்ட வீடியோவில், இங்குள்ள மெர்காங்கின் ஜாலான் புத்ராவில் உள்ள தங்க நகைக் கடையில் இருந்து நகையைத் திருடுவதைக் காட்டுகிறது.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிர் கூறுகையில், கடந்த வியாழன் மாலை 5 மணியளவில் வாடிக்கையாளரைப் போல் நடித்து, சந்தேகநபர் சுமார் RM30,000 மதிப்புள்ள 99.34 கிராம் எடையுள்ள தங்க கைச்சங்கிலியுடன் தப்பிச் சென்ற சம்பவம் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் மாலை 6.35 மணியளவில் தமது கட்சிக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.
“இந்தச் சம்பவத்தின் சந்தேக நபர், 21 வயதான உள்ளூர் ஆடவர், முன்பு நகைகளை வாங்க விரும்புவதாகக் கூறி அந்த வளாகத்திற்கு வந்திருந்தார் என்பது போலீசாரின் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
“எனினும், சந்தேக நபர் சம்பந்தப்பட்ட வளாகத்தில் இருந்து 99.34 கிராம் எடையுள்ள தங்க கைச்சங்கிலியை எடுத்துக்கொண்டு திடீரென தப்பிச் சென்றார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த நபரின் செயலைக் கவனித்த தங்க நகைக் கடை விற்பனையாளர், உடனடியாக சந்தேக நபரை துரத்தினார் ஆனாலும் அவரை பிடிக்க முடியவில்லை . அதன் பின்னர் அவர் காவல்துறையை அழைத்தார் அஹ்மட் சுக்ரி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆலூர் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் (சிபிஜே) குழுவை அந்த இடத்திற்கு அனுப்பினார்.
“அதேநேரம் இங்குள்ள தாம்பாங் படாக் போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் வைத்தது, பொதுமக்கள் உதவியுடன் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
“சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று தொடங்கி செப்டம்பர் 26 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
மேலும் விசாரணைக்காக சந்தேகநபர் பயணித்த வோக்ஸ்வேகன் எம்கே7 ரக வாகனத்தையும் போலீசார் கைப்பற்றியதாக அஹ்மட் ஷுக்ரி கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.