கோத்தா திங்கி, செப்டம்பர் 26 :
நேற்றிரவு இங்குள்ள ஜாலான் கோத்தா திங்கி-குளுவாங் சாலையின் Km39.5 இல், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது காட்டுக்கோழி மோதியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்.
இரவு 8 மணியளவில், பண்டார் தெங்கராவிலிருந்து ஃபெல்டா பெங்கேலி தைமூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, காட்டுக்கோழி மோட்டார் சைக்கிளில் மோதியதால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 40 வயது நபரும் அவரது ஒன்பது வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர், ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.
“இறந்தவர்களின் உடல்கள் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.