ஜோகூர் பாரு, செப்.29 :
கடந்த வாரம், ஒரு விடுதியில் தனது காதலனைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவர் மரண தண்டனை எதிர்நோக்கியுள்ளார்.
19 வயதான சிம் ஹுய் யிங் என்பவருக்கு ஏதிரான குற்றச்சாட்டு, மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டபோது, அவர் குற்றச்சாட்டை புரிந்துகொண்டதாகக் காட்ட தலையசைத்தார்.
மாவட்ட நிதிமன்ற நீதிபதி ஆர். சாலினி முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோதிலும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தில் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் சிம்மிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின் படி, குற்றம் சாட்டப்பட்டவர் செப்டம்பர் 20ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் தாமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள ஒரு விடுதியில் 29 வயதான யாப் கெல்லி என்பவரை கொலை செய்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது.
பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன அறிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை குறிப்புக்காக நீதிபதி சாலினி டிசம்பர் 6 ஆம் தேதியை நிர்ணயித்தார்.
துணை அரசு வழக்கறிஞர் நூர் ஐனா சியாகிரா முஹமட் சியாபிக் சிம் வழக்கு தொடர்ந்தார், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
முன்னதாக, ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் இந்த வழக்கை உறுதிசெய்தத்துடன், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் செப்டம்பர் 21 முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.