யூடியூப்பில் இருந்து கற்றுக்கொண்டு, சொந்தமாக போலி துப்பாக்கிகளை தயாரித்து பயன்படுத்திய ஆடவர் கைது

ஈப்போ, செப்டம்பர் 30 :

பேராக் மாநிலம் முழுவதும் செப்டம்பர் 26 முதல் 28 வரை நடத்தப்பட்ட ‘ஓப் தாபிஸ் காஸ்’ என்ற நடவடிக்கையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 408 போதைக்கு அடிமையானவர்களில், போலி ஆயுதங்களை வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில், சித்தியவானின் தாமான் மேவா ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையில், 39 வயதான அவர் கைது செய்யப்பட்டார்.

“அவரது வீட்டைச் சோதனை செய்ததில், மூன்று ஏர் ரைபிள்கள், ஒரு போலி பிஸ்டல், ஒரு மாற்றியமைக்கப்பட்ட எரிவாயு கொள்கலன், ஒரு ஜோடி கைவிலங்குகள், சாவிகள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் என்று நம்பப்படும் ஒரு பொருளைக் கொண்ட ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலம் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்”.

“சந்தேக நபர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஏர் ரைஃபிளைப் பயன்படுத்தியதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் அவர் யூடியூப்பில் இருந்து அதைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்,” என்று அவர் இன்று பேராக் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சந்தேகநபர் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருளுக்கு சாதகமான் பதிலை பெற்றதாகவும், அவருக்கு போதைப்பொருள் தொடர்பான முத்தையா குற்றவியல் பதிவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 மற்றும் துப்பாக்கிச் சட்டம் 1960 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here