கூடாத், அக்டோபர் 2 :
பாங்கி தீவில் உள்ள கராகிட் காவல் நிலையத்தைப் புதுப்பிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் RM500,000 ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று அறிவித்தார்.
இன்று பாங்கி தீவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் கூறுகையில், “பாங்கி தீவில் பாதுகாப்பு ரோந்து நோக்கங்களுக்காக ஒரு கடல் போலீஸ் ரோந்துப் படகும் சேவையில் ஈடுபடும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ‘Menyemai Kasih Rakyat’ (MEKAR) திட்டத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள், MyKad மற்றும் MyKid உட்பட மொத்தம் 30 அடையாள ஆவணங்கள் குடியிருப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் பாங்கி தீவில் வசிப்பவர்கள் கராகிட் காவல் நிலையத்தில் தங்கள் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்யலாம் என்றும் ஹம்சா கூறினார்.