கோவிட்-19 புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது என்கிறார் சுகாதார இயக்குநர் ஜெனரல்

கோலாலம்பூர், அக்டோபர் 3:

கடந்த செப். 18 முதல் 24 வரை பதிவான 12,963 கோவிட்-19 புதிய தொற்று தொற்றுக்களில் இருந்து, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையான காலப்பகுதியில் 5.2 விழுக்காடு குறைந்து 12,291 ஆக பதிவாகியுள்ளது உள்ளது, என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“39வது எபிக் வாரத்தில் கோவிட்-19 காரணமாக இறப்பு வழக்குகள் 35 விழுக்காடு குறைந்து, அதாவது 38வது வாரத்தில் இறப்பு 40 பேராக இருந்து 26 ஆக குறைந்துள்ளது. “என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினசரி செயலில் உள்ள கோவிட்-19 தொற்றுக்களின் போக்கும், கிட்டத்தட்ட 38வது வாரத்தின் முடிவில் 30,819 தொற்றுக்களில் இருந்து, 39வது வார முடிவில் 27,486 ஆகக் குறைந்துள்ளது என்றார்.

மேலும் கோவிட்-19 தொற்றுக்களிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையை நோக்கினால், முந்தைய வாரத்தில் 13,677 தொற்றுக்களாக இருந்து, 3வது எபிக் வாரத்தில் 8.4 விழுக்காடு குறைந்து 12,534 தொற்றுக்களாக பதிவாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here