கோலாலம்பூர், அக்டோபர் 4 :
இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 4) சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் தலைநகரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) பகிர்ந்த புகைப்படங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் குச்சாய் லாமா, லெபுஹ்ராயா புக்கிட் ஜலீல், ஜாலான் பங்சார் மற்றும் ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் சில பகுதிகளில் தண்ணீர் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் Alam Flora Sdn Bhd நிறுவனத்தின் தொழிலாளர்கள் புலத்தான் டத்தோ ஓன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஸ்கப்பர் வடிகால்களை சுத்தம் செய்ய அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் சில தொழிலாளர்கள் ஜாலான் ராஜா லாவூட் மற்றும் ஜாலான் தாங்சிக்கு அனுப்பப்பட்டு, அங்கு வடிகாலுள்ள தடைகளை அகற்றுவதற்கான உடனடி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
10 நிமிடம் பெய்த கனமழைக்குப் பிறகு பங்சரின் தெலாவி பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
ஜாலான் புக்கிட் பந்தாய் நெடுகிலும், வடிகால்களில் இருந்து பலத்த நீர் பாய்வதாகவும் கோலாலம்பூர் மாநகர சபை தெரிவித்துள்ளது.