திரெங்கானுவில் வெள்ள அபாயமுள்ள 192 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செத்தியூ, அக்டோபர் 4 :

திரெங்கானு மாநிலம் முழுவதும் 192 வெள்ள அபாயமுள்ள இடங்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் அனைத்து இடங்களும் அடையாளம் காணப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ஹில்மன் அப்துல் ரஷீட் தெரிவித்தார்.

“உறுப்பினர்களின் பலம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான போதுமான சொத்துக்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் எப்போதும் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.

“எங்கள் உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ள 192 வெள்ள அபயா இடங்களில் வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்,” என்று அவர் திரெங்கானு ஜேபிபிஎம் சிறப்புப் படை சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து நடத்திய பாடநெறி நிறைவு விழாவுடன் இணைந்து நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த ஆண்டு வெள்ளப் பேரழிவை எதிர்கொள்வதற்கான சொத்துக்களின் திறன் குறித்து, அவர் கூறுகையில், ஜேபிபிஎம் திரெங்கானுவில் இப்போது 50 படகுகள் உள்ளன, மீட்புப் பணிக்கு இது போதுமானது.

இதற்கிடையில், வெள்ளத்தின் போது மீட்புப் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, 800 உறுப்பினர்களில் 10 விழுக்காட்டினர் பேர் மட்டுமே விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், தேவைப்பட்டால் அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here