பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 6 :
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இன்று வியாழக்கிழமை (அக் 6) பிற்பகல் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், மலேசிய நேரப்படி மாலை 4.31 மணிக்கு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியது, அது 2.7° வடக்கு மற்றும் 99.8° கிழக்கில் 41 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்னாமில் இருந்து தென்மேற்கே 165 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
மேலும் சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் பகுதிகளில் மிக மெதுவான நடுக்கம் உணரப்படலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.