ஜெம்போல், அக்டோபர் 9:
இன்றுடன் முடிவடையும் நெகிரி செம்பிலான் மலேசியக் குடும்ப அபிலாசைகள் சுற்றுப்பயணத்தில் (AKM Tour) கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடைபெற்றதில், வணிகப்பொருட்கள் உட்பட மொத்தம் RM4.46 மில்லியன் விற்பனையை பதிவு செய்துள்ளது.
பிரதமர் துறையின் கீழ் உள்ள மூலோபாய திட்டப் பிரிவு, SEPADU இன் மூத்த முதன்மை உதவியாளர் அல்பிசான் ஓமர் கூறுகையில், மாநிலத்தில் 10வது தடவை நிகழும் மலேசியக் குடும்ப அபிலாசைகள் சுற்றுப்பயணமானது, பண்டார் ஶ்ரீ ஜெம்போல், டத்தாரான் ஶ்ரீ ஜெம்போலில் நடைபெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.
நேற்றைய நிலவரப்படி 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
மலேசியக் குடும்ப அபிலாசைகள் சுற்றுப்பயணமானது இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்ததன் பின்னரான, விற்பனை மதிப்பு இன்னமும் அதிகரிக்கும் என்றார்.
“சிறு மற்றும் நடுத்தர தொழில்களைச் சேர்ந்த (SMEs) தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் என்பன இங்கு விற்பனைக்கு வந்தன, அதேசமயம் மலேசிய குடும்பங்கள் மலிவு விற்பனை (JMKM) பிரிவின் கீழ் தினசரி அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நேற்று RM40,000-க்கும் அதிகமாக இருந்தது என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சகம் (MOH) தலைமையிலான இந்த சுற்றுப்பயணத் தொடரானது ‘மலேசியாவின் ஆரோக்கியமான மற்றும் வளமான குடும்பம்’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது மற்றும் 100க்கும் மேற்பட்ட SMI தொழில்முனைவோரையும் உள்ளடக்கியது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.