15ஆவது பொதுத் தேர்தல் (GE15) தான் போட்டியிடும் கடைசித் தேர்தலாக இருக்கும் என்று டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர், கட்சி அவரை GE15 வேட்பாளராக நிறுத்தினால், தான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் இதுவாகும் என்றார்.
ஒருவேளை இது (GE15) எனது கடைசி பதவிக் காலமாக இருக்கலாம். அதன் பிறகு, நான் வீட்டில் ஓய்வெடுத்து, என் மனைவி, எனது எட்டு பேரக்குழந்தைகள், என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவேன் என்று அவர் கூறினார்.
75 வயதான முஹிடின் எட்டாவது பிரதமராக மார்ச் 1, 2020 அன்று பதவியேற்றார். ஆனால் 17 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பதவி விலகினார்.