உலக அபாகஸ், மனக்கணக்கு போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

அனைத்துலக அபாகஸ், மனக்கணக்கு போட்டி அண்மையில் தைவானில் ஆன்லைன் வழி நடந்தது. WAMAMRA (வமாம்ரா) உலக அபாகஸ், மனக்கணக்கு ஆய்வு சங்கம்  இயங்கலை வழி இப்போட்டியை நடத்தியது. இந்தப் போட்டி தைவானில் நடைபெற்றது.  மொத்தம் 25 நாடுகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் மலேசியாவில் இருந்து 15 இந்திய மாணவர்கள் களமிறங்கினர்.  இவர்களில் 3 மாணவர்கள் முதல் நிலையில் வாகை சூடினர். 12  மாணவர்கள் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களும் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கும் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அபாகஸ், மனக்கணக்கு கற்பித்தலில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மலர், இந்த 15 மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து போட்டியில் பங்கேற்க வைத்த பெருமைக்குரியவர்.

               கிள்ளானில்–Malar Mental Arithmetic எனும் பெயரில் அவர் ஒரு மையத்தை நடத்தி வருகிறார். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இந்திய மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வழிகாட்டுவார்கள்.                பள்ளிகளில் நம் பிள்ளைகள் அச்சமின்றி மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையோடும் கணிதம் கற்க வேண்டும் என்பதுதான் தங்களது இலக்கு என்கிறார் மலர்.

 


                            மலர்விழி

 

 

முதல் நிலையில் வாகை சுடிய மாணவர்கள்

      கவிநயாஸ்ரீ சிவராஜா – கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி

 

 ஷாரிகா ஜெகதீஸ்வரன் – ஸ்ரீ அண்டாலாஸ் இடைநிலைப்பள்ளி

 

        ஷசின் சுகுமாறன் – ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளி

 

இரண்டாம் நிலை வெற்றியாளர்கள்

வர்ணிக்கா ஜெகன் – ஸ்ரீ இக்தியார் ஹில்ஹாம் பாலர் பள்ளி

 

டேனிஷ்  பின் ராஜேந்திரன் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

சர்வேஸ் அபிராம் த/பெ நவநீதன் –  சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

   சங்கமித்ரா த/பெ கணேஸ் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

அர்வின் த/பெ பன்னீர்செல்வம் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

          ஹர்ஷித்தா த/பெ பாரதிதாசன் – ராஜா மஹாடி
இடைநிலைப்பள்ளி

 

  ஷஸ்விகன் த/பெ கேசவன் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

தீபிகாஸ்ரீ த/பெ அன்பானந்தன் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

கிஷோர்டரன் த/பெ திலகர் – ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளி

 

தனிஷா த/பெ ராஜேந்திரகுமார் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

தமிஷா த/பெ ராஜேந்திரகுமார் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

இரண்டாம் நிலை நம்பிக்கை நட்சத்திர விருது வெற்றியாளர்

            சுஜித்ரா ஜெகன் – சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here