2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக..

லண்டன், அக்டோபர் 18 :

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற புனைகதைக்காக ஷெஹான் கருணாதிலக புக்கர் பரிசை வென்றுள்ளார்.

இந்த நாவல், விடுதலை புலிகள் – இலங்கை ராணுவம் இடையே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைகதையாக எழுதப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பிரபல கச்சேரி அரங்கான ரவுண்ட்ஹவுஸில் புக்கர் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும் ராணியுமான காமிலா கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here