சுங்கை பட்டாணி, அக்டோபர் 19:
நேற்றிரவு கெடா மாநில குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் 39 சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ததாக, கெடா குடிநுழைவுத் துறை இயக்குனர், முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் கூறினார்.
27 அதிகாரிகளை உள்ளடக்கிய திறமையான நடவடிக்கையில் தாமான் ரியா ஜெயாவில் உள்ள கெடா மாநில வளர்ச்சிக் கழகத்தின் லைட் இண்டஸ்ட்ரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
அப்பகுதியிலிருந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையில் மொத்தம் 168 தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் பின்னர் மொத்தம் 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர், சோதனையின்போது அவர்களில் சிலர் பிளாஸ்டிக் குவியல்களுக்கு அடியிலும், கைவிடப்பட்ட அறைகளிலும் ஒளிந்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தனர், ஆனாலும் அவர்கள் கைது செய்யப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்று அவர் கூறினார்.
கைது செய்யப்படடவர்களில் 36 மியன்மார் ஆண்கள், 2 பாகிஸ்தானியர்கள் ஒரு வங்காளதேசி ஆகியோர் அடங்குவர் என்றும் அவர்கள் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்” என்றும் அவர் கூறினார்.