சின்னத்திரை நடிகர் அர்ணவ் ஜாமீன் மனு ரத்து

சின்னத்திரை நடிகை திவ்யா தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் என கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்பேரில் போருர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அர்ணவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து 15 நாள் காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அர்ணவ் தனக்கு ஜாமின் வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இல்லாத காரணத்தால் இதன் பொறுப்பு நீதிபதியான அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதி மனுவை விசாரித்தார். இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி நடிகர் அர்ணவ் ஜாமினில் வந்தால் சாட்சிகளை களைக்க கூடும் என எதிர்தரப்பு வாதத்தை ஏற்று அர்ணவின் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here