வாட்ஸ்அப் செயலி மூலம் ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்காக, ஆடவருக்கு RM3,000 அபராதம்

மாராங், அக்டோபர் 19 :

கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் செயலி மூலம், தன் உறவினரான பெண்ணின் கெளரவத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தொழிற்சாலை ஊழியருக்கு, இன்று மாவட்ட நீதிமன்றம் RM3,000 அபராதம் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி எங்கூருல் ஐன் எங்க்கு மூடா இந்த முடிவை எடுத்தார். 26 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் அபராதத்தை செலுத்தத் தவறினால், ஆறு மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்வார்.

குற்றச்சாட்டின்படி, வாட்ஸ்அப் செயலியில் வீடியோ அழைப்பின் மூலம் 32 வயதான பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

14 செப்டம்பர் 2021 அன்று காலை 8.53 மணிக்கு, இங்குள்ள பசார் பெசார் மாராங்கிற்கு எதிரே உள்ள ஒரு உணவகத்தில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது,

எனினும், இவ்வழக்கில் அபராதம் செலுத்திய பின்னர் குற்றவாளி விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here