கோலாலம்பூர், அக்டோபர் 20 :
கடந்த வெள்ளிக்கிழமை (அக். 14) திறக்கப்பட்ட டாமான்சாரா-ஷா ஆலாம் நெடுஞ்சாலையில் சாலையில் (DASH) முதல் மரண விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (அக். 20) அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் சறுக்கி, சாலைத்தடுப்பின் மீது மோதியதில் உணவு விநியோகிஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறுகையில், வியாழன் நள்ளிரவு 12.05 மணியளவில் பென்சாலாவிலிருந்து தெனாய் ஆலாம் சாலையின் 15.7வது கிலோமீட்டரில் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது என்றார்.
24 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இச்சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவ போக்குவரத்து புலனாய்வு அதிகாரி ஆய்வாளர் முஹமட் ஹிஸ்யாம் அஜிஹ்வை 017-737 8704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.