கொள்ளை வழக்குடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

சிபு, அக்டோபர் 21 :

கும்பலாகச் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்பட்ட உள்ளூர் ஆண்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.

இங்குள்ள ஜாலான் கூ பெங் லூங்கில், நேற்று இரவு 11.30 மணியளவில் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பில், 57 வயதான உள்ளூர் மனிதரிடமிருந்து புகார் கிடைத்ததாகவும், குறித்த ஆடவரை ஒரு குழுவினர் ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக நெற்றியிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டது என அறியமுடிகிறது.

“கொள்ளையின்போது பாதிக்கப்பட்டவர் தனது கைத்தொலைபேசி, தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் RM13,000 பணத்தை இழந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவு, சிபு மாவட்ட காவல்துறை தலைமையகம் இணைந்து பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 27 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக, கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here