சிபு, அக்டோபர் 23 :
15வது பொதுத் தேர்தலில் (GE15) பக்காத்தான் ஹராப்பான் (PH) கட்சிகள் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்தினாலும், சரவாக் DAP தனது ராக்கெட் சின்னத்தைதொடர்ந்து பயன்படுத்தும் என்று மாநில DAP கட்சித் தலைவர் சோங் சியெங் ஜென் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு ராக்கெட் சின்னத்தை நன்கு தெரிந்திருப்பதால், அது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாது என்பதனால் இந்த முடிவை தாம் எடுத்ததாக, இன்று சிபு DAP செயல்பாட்டு அறையை தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.