நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகருகின்றன

கோலாலம்பூர், அக்டோபர் 24 :

இன்றைய தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நண்பகல் போக்குவரத்து மெதுவாக இருந்தது.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை டோல் பிளாசா (KLK) மற்றும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) செனவாங்கிலிருந்து போர்ட்டிக்சன் வரையிலான கிழக்கு நோக்கிய பாதை ஆகியவற்றில் வாகனங்கள் மெதுவாக நகருவதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (LLM) தனது அதிகாரப்பூர்வ டூவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் லெந்தாங் -புக்கிட் திங்கி (KLK) சாலையின் தெற்கு நோக்கி 46.2 ஆவது கிலோமீட்டரிலும் சுக்காய்-ஸ்லிம் ரிவர் சாலையின் 354.6 ஆவது கிலோமீட்டரிலும் தலை ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து மெதுவாக காரணம்,” என்று அது கூறியது.

பொதுமக்கள் 1800-88-0000 என்ற கட்டணமில்லா பிளஸ்லைன் மூலமாகவும், www.twitter.com/plustrafik இல் Twitter அல்லது LLM இன் ஹாட்லைன் 1800-88-7752 மற்றும் Twitter இல் www.twitter.com/llminfotrafik மூலமாகவும் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம் என்றும் அது தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here