சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 26 ஜோகூர் BN வேட்பாளர்களின் பெயர் பட்டியல் போலியானது – அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

ஜோகூர் பாரு, அக்டோபர் 27 :

15வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படும் 26 ஜோகூர் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களின் பெயர்களைக் காட்டும், சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்ட ஒரு பெயர்ப் பட்டியல் போலியானது என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

பொந்தியான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான அவர், வைரலான 26 ஜோகூர் வேட்பாளர்களின் பெயர் கொண்ட பட்டியல் போலியானது என்றும், நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘ ஜோகூர் BN வேட்பாளர் அறிவிப்பு நாளன்றே’ உண்மையான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

“எனக்கு வேட்பாளர்களின் உண்மையான பட்டியல் ஏற்கனவே தெரியும், ஆனால் ஜோகூரில் போட்டியிடும் BN வேட்பாளர் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை என்னால் அதை பகிரங்கப்படுத்த முடியாது,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்றிரவு முதல், 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 15வது பொதுத் தேர்தலின் ஜோகூர் BN வேட்பாளர்களின் பட்டியல் என்ற தலைப்பில் ஒரு பெயர் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலானது, அதில் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதாகக் கூறப்படும் ஜோகூர் BN மற்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் உள்ளிட்டோரின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here