வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிகேட்ட மனைவி – காரை ஏற்றிகொல்லமுயன்ற சினிமா தயாரிப்பாளர்

சர்மா ஜி கி லக் கயி’, ‘தேஹாட்டி டிஸ்கோ’, ‘காலி பாலி’ உள்பட பல பாலிவுட் படங்களை தயாரித்தவர் கமல் கிஷோர் மிஸ்ரா. மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்.

அந்நேரம் அவரின் மனைவி யாஷ்மின் மிஸ்ராவை தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். அப்போது காரில் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்து தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லும் மனநிலையில் இருந்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்றார். இதில் மிஸ்ரா மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் மிஸ்ரா மனைவிக்கு கால், கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here