˜கோலசிலாங்கூர், அக். 30-

அரசாங்கம் எப்போதும் மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கின்றது. அவ்வகையில் இவ்வாண்டு மட்டும் விவசாயம்- மீன் பிடித் தொழில் துறையினருக்காக அரசாங்கம் 1.7பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்தொகை – உதவித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மீன்பிடி முன்னெடுப்புகளுக்கான உதவித் திட்டங்களுக்கும் 151.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாக பராமரிப்பு நிதி அமைச்சர் தெங்கு டத்˜தாஸ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

அண்மையில் இவர் ˜கோலசிலாங்கூர் ஜெராமிலுள்ள சுங்கை செம்பிலாங் படகுத் துறையின் அவ்வட்டாரத்தைச் ˜சேர்ந்த மீனவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

நிகழ்ச்சியில் ˜பேசிய அவர், கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 533 மீனவர்கள் வாழ்கிறார்கள் என நான் தகவல் பெற்றேன். இந்த எண்ணிக்கை அதிகம்தான்.

எனவே, இந்த வட்டாரத்தில் 533 குடும்பங்கள் வசிப்பதாகக் கருதுகின்றேன். முன்னதாக நான் சுங்கை செம்பிலாங் பகுதியில் வசிக்கும் அரசுத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற டத்தோ வஹாப்புடன் கலந்துரையாடினேன்.

அவர் குறிப்பிட்ட தகவலின்படி இங்குள்ள மீனவர்கள் சமீப காலமாக இறால் பிடிப்பில் அதிகமாக ஈடுபடுவது தெரியவருகின்றது. அதே ˜போல் இளம் மீனவர்களும் இங்கு மீன் பிடிக்கவரும் மக்களை அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர். அதேபோல் சில கழுகுகளுக்கு உணவளிப்பது, ஸ்கை மீரர் பகுதியைச் சுற்றிப் பார்ப்பது ˜போன்ற நடவடிக்கைகளுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் லெ்லும் பணிகளை செய்து வருவதாகவும் தகவல் பெற்றேன்.

சொல்லப்˜போனால் லங்காவி தீவில் கிடைக்கும் அனுபவம்˜போல் உள்ளது. இது தவிர இங்குள்ள மீனவ சமூகத்தினர் மைகேபி எண்டர்பிரைஸை தொடங்கிவிட்டனர். ஒன்றிணைந்து ˜மேற்கொள்ளப் படும் இத்திட்டங்களின் வழி மாதந்˜தோறும் 500 ரிங்கிட்டுக்கும் ˜மேற்பட்ட அளவில் கூடுதல் வருமானம் ஈட்டிவருகின்றனர்.

அதேபோல் இன்னும் சிலர் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவதாகவும் ˜கேட்டறிந்தேன். இந்தப் பகுதியில் தற்போது சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட 12 தங்குமிடங்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

இது தவிர ˜டேசா சுங்கை செம்பிலாங் தங்குமிட கூட்டுறவுக் கழகம் ˜தோற்றுவிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது தவிர சுற்றுலாத்துறை சார்ந்த இணை துறைகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. இந்த முன்னெடுப்புகள் அனைத்தையும் நான் பாராட்டுகின்றேன் என்றார் அவர்.

அதே சமயம் அரசாங்கம் மீனவ சமூகத்தினர் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை அது சார்ந்த துறைகள்- அமைப்புகள் மூலம் செயல்படுத்துகின்றது.
உதாரணத்திற்கு ˜கோலசிலாங்கூரைச் ˜சேர்ந்த அலி எனும் மீனவர் 12 மாதங்களுக்கு மீனவ வாழ்வாதார அலாவன்ஸ் தொகையைப் பெறுகின்றார். மாதத்திற்கு 250ரிங்கிட் என்பது ஒரு வருடத்திற்கு 3ஆயிரம் ரிங்கிட்டாகும்.

இது˜போன்ற உதவித் திட்டங்களை இங்குள்ள மீனவர்கள் அறிந்து அதற்கு விண்ணப்பமும் செய்திருப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
அடுத்தாண்டிற்கு அராங்கம் நிதி ஒதுக்கீட்டில் 100 மில்லியன் ரிங்கிட்டை அதிகரித்துள்ளது. இதன் வழி மொத்தமாக 1.8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மீன மூகத்தினருக்கான உதவிநிதி- முன்னெடுப்புகளுக்கு 178.2 மில்லியன் ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்படுகின்றது. ˜மேலும், மாநிலங்களில் பி40 பிரிவு மீனவர்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு அராங்கம் 3 மில்லியன் நிதி ஒதுக்கிட திட்டமிட்டுள்ளது.

இது தவிர சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமப்புற தங்குமிட தரப்பினருக்கு பழுது பார்க்கும் கிராண்ட் தொகை வழங்க அராங்கம் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது என்பதையும் தெங்கு ஸஃப்ருல் சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில் இந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், மீனவர்களிடமிருந்து பல்வேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, சிலாங்கூர் மாநில மீன்பிடி இலாகா பிரதிநிதிகளோடு எனது அதிகாரிகளை இங்குள்ள 7 மீனவப் படகுத் துறைகளுக்குச் சென்று தகவல் ˜சேகரித்து வரும்படி நான் உத்தரவிட்டிருந்தேன்.

அதன்மூலம் இந்த படகுத் துறைகள் பழுது பார்க்கப்பட்டு தரம் உயர்த்தப்பட ˜வண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். அதற்கு சிறிய – பெரிய அளவிலான தொகைகளும் ˜தேவைப்படுகின்றன. இது தவிர மாநில- மத்திய அளவிலான சம்பந்தப்பட்ட இலாகாக்களின் பரிசீலனையும் ஒப்புதலும் அவசியமாகின்றது.

எனவே, தொடக்கப்புள்ளியாக அதிகாரிகள் வருகை ˜மேற்கொண்ட 7 படகுத் துறைகளுக்குத் தலா 10 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்க நான் ஒப்புதல் அளித்துள்ளேன். ˜மேலும், சுங்கை செம்பிலாங் தங்குமிட கூட்டுறவுக் கழகம், மைகேபி எண்டர்பிரைஸ் தரப்பினருக்கு உதவி ˜தேவை என சுங்கை செம்பிலாங் மக்கள் விண்ணப்பம் செய்திருந்தனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here