புத்ராஜெயா, நவம்பர் 1 :
இலங்கைக்கு RM288,610.00 மதிப்பிலான மருந்தை வழங்கியதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் நேற்று திங்கள்கிழமை (அக் 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கலா டயஸிடம் சுகாதார அமைச்சகம், புத்ராஜெயாவில் வைத்து இந்த மருந்துகளை கையளித்தார்.
இந்த பங்களிப்பு மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளையும் நட்பையும் பேணவும் இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த உதவி துணைபுரியும் என நம்பப்படுகிறது.