சென்னையில் தொடரும் கனமழை ; இருவர் பலி

சென்னை, நவம்பர் 1:

சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கொட்டும் கனமழை கொட்டி வருகிறது.

பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் .

தொடர் மழையால் கிண்டி – கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை சென்னையில் மழையினால் இருவர் உயிரிழந்து உள்ளனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்து உள்ளார். மற்றோருவர் வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here