2022 ஆம் ஆண்டு ஶ்ரீ அங்கசா (ASA) விருது

எம். அன்பா, புத்ராஜெயா, நவ. 1-

உள்நாட்டு கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இனி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் என தொடர்பு பல்லூடக அமைச்சர் டான் ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

சமூக ஊடகப்பிரிவு உட்பட கூடுதலாக இதர பிரிவுகளும் இணைக்கப்பட்டு ஸ்ரீ அங்காசா விருதளிப்பு வரும் காலங்களில் தொடரப்படும் என்றார் அவர். கடந்த இரு நாட்களாக நடைபெற்ற தரம் வாய்ந்த அந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் மன நிறைவு அளித்ததாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு கலைத்துறை சார்ந்த துறைகளுக்கு விருதளிப்பு நடத்தப்பட்ட இந்த விருது விழாவில் கலைஞர் ஹஃஜா ஃபவுசியா நவி இவ்வாண்டுக்கான ஸ்ரீ அங்காசா தொக்கோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். அவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணம், கிண்ணம், கார் ஒன்றும் வழங்கப்பட்டது. உள்நாட்டுக் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் சிறந்த அதிகாரப்பூர்வ YouTube பொழுதுபோக்கு கிளிப்புகள், சிறந்த அதிகாரப்பூர்வ YouTube நாடகத் தொடர், சிறந்த வானொலி பொழுதுபோக்கு, சிறந்த ஆண் வானொலி தொகுப்பாளர்,சிறந்த பெண் வானொலி தொகுப்பாளர், சிறந்த SCP டிவி கேமராமேன், சிறந்த எம்சிபி டிவி கேமராமேன், சிறந்த டிவி லைட்டிங் அமைப்பு, சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆடியோ, சிறந்த டிவி இசை,சிறந்த TV PS அகள் காப்ஸ்யூல்கள், சிறந்த டிவி புல்லட்டின், சிறந்த தொலைக்காட்சி பத்திரிகையாளர்,


சிறந்த டிவி விளையாட்டு கவரேஜ், சிறந்த நேரடி ஒளிபரப்பு சிறப்பு கவரேஜ், சிறந்த டிவி தொகுப்பாளர், சிறந்த தொலைக்காட்சி செய்தி வழங்குபவர், சிறந்த தொலைக்காட்சி இசை பொழுதுபோக்கு, சிறந்த தொலைக்காட்சி இதழ், சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை, வானொலி நாடகத்தில் சிறந்த நடிகர், சிறந்த வானொலி நாடக நடிகை, சிறந்த வானொலி நாடக ஸ்கிரிப்ட், சிறந்த வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகத்தில் சிறந்த நடிகர், சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை, சிறந்த தொலைக்காட்சி நாடக ஸ்கிரிப்ட், சிறந்த தொலைக்காட்சி நாடக இயக்குநர், சிறந்த தொலைக்காட்சி ஆவணப்படம், சிறந்த தொலைக்காட்சி நாடகம், தோக்கோ செரி அங்கசா 2022,

சிறந்த வானொலி விளம்பரம், சிறந்த வானொலி வர்ணனையாளர், சிறந்த வானொலி செய்தி வழங்குபவர், சிறந்த ரேடியோ புல்லட்டின், சிறந்த வானொலி செய்தி கவரேஜ், சிறந்த அதிகாரப்பூர்வ Youtube குறும் நாடகம், சிறந்த அதிகாரப்பூர்வ Youtube குறும்படங்கள், அதிகாரப்பூர்வ Youtube மூலம் சமூக சேவை ஆணை, சிறந்த வானொலி இதழ்,

சிறந்த வானொலி ஆவணப்படம், சிறந்த வானொலி பேச்சு, சிறந்த வானொலி நிகழ்ச்சி, சிறந்த மத தொலைக்காட்சி நிகழ்ச்சி, ரேடியோ டிவி நாடகத்தில் சிறந்த துணை நடிகர், வானொலி தொலைக்காட்சி நாடகத்தில் சிறந்த துணை நடிகை, சிறந்த டிவி செட், சிறந்த டிவி கிராபிக்ஸ், சிறந்த டிவி வர்ணனையாளர், சிறந்த தொலைக்காட்சி செய்தி கவரேஜ், சிறந்த தொலைக்காட்சி செய்தி சிறப்பு அறிக்கை, சிறந்த தொலைக்காட்சி விளம்பரம், சிறந்த டிவி மோண்டேஜ், சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எடிட்டிங், சிறந்த டிவி கிட்ஸ் ஷோ, சிறந்த டிவி அனிமேஷன், சிறந்த தொலைக்காட்சி நாடகம், சிறந்த ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி,

சிறந்த தொலைக்காட்சி பேச்சு, சிறந்த மத தொலைக்காட்சி நிகழ்ச்சி, சிறந்த தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி, சிறந்த தொலைக்காட்சி குழந்தை நடிகர், சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், சிறந்த தொலைக்காட்சி நாடக துணை நடிகர், சிறந்த தொலைக்காட்சி நாடக துணை நடிகை, சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் மேலும் சிறப்பு நடுவர் விருது ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு சிறந்த அடைவு நிலைக்கான விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு, மல்டிமீடியா ஏற்பாட்டில் அக்டோபர் 29,30 ஆகிய தேதிகளில் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்ட விருது விழாவில் உள்ளூர் கலைப்படைப்பு மேலும் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கான அங்கீகார விருது விழாவாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here