கைரி சுங்கை பூலோவில் போட்டியிடுவது பாதுகாப்பானது என்கிறார் தோக் மாட்

சிரம்பான், நவம்பர் 3 :

15வது பொதுத் தேர்தலில் (GE15) நடப்பு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் போட்டியிடுவதற்கு சுங்கை பூலோ பாதுகாப்பான நாடாளுமன்றத் தொகுதி என்று தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார்.

“சுங்கை பூலோவில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான மலாய் வாக்காளர்கள் உள்ளனர், இது கைரிக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகும். சுங்கை பூலோ அம்னோ பிரிவுத் தலைவர் கைரியின் அரசியல் செயலர் (டத்தோ மெகாட் ஃபிர்தூஸ் டான் ஸ்ரீ மெகாட் ஜூனிட்), எனவே அவருக்கு (UMNO) அங்கு நல்ல செல்வாக்குள்ளது, மேலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாத இடத்திற்குச் செல்வதை விட அங்கு செல்வது மிகவும் நல்லது என்றார்.

“என்னை தவறாக எண்ண வேண்டாம், இது மிகவும் பாதுகாப்பான இருக்கை, ஏனென்றால் அங்குள்ள மக்கள் UMNO வில் இருந்து ஒரு வேட்பாளரை விரும்புகிறார்கள். மேலும் அத்தொகுதியில் கைரி சிறந்து விளங்குவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி வேட்பாளர்களிடம் வேட்பாளர் ஆவணங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்சியில் ஒளிமயமான எதிர்காலத்துடன் கைரி ஒரு சிறந்த தலைவர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here