சட்டவிரோதமாக குடியேறிய 387 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் நேற்றிரவு தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

சண்டகான், நவம்பர் 3 :

பிலிப்பைன்ஸில் இருந்து சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிய 387 பேர், நேற்று இரவு சண்டகன் துறைமுகம் வழியாக அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் 372 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் அடங்குவர் என மலேசிய குடிவரவுத் துறையின் (JIM) சபா மாநில இயக்குநர், டத்தோ SH சித்தி சாலிஹா ஹபீப் யூசோஃப் தெரிவித்தார்.

குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்ததற்காக அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் தாவாவ் குடிநுழைவு தடுப்பு முகாமில் முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டது தேசிய சட்ட செயல்முறையின் அடிப்படையிலானது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here