பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவேண்டாம் ; ரஃபிஸி.

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, இளைஞர்கள் பணக்காரர்களாக விரும்பினால், அரசியலில் சேர வேண்டாம் . அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) அல்லது சிவில் சேவையில் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

செல்வத்தைக் குவிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தால், அதற்குப் பதிலாக சொந்தத் தொழிலைத் தொடங்குமாறு ரஃபிஸி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சராக நீங்கள் உங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், நீங்கள் மக்களால் கண்டிக்கப்படுவீர்கள். எனவே  நீங்கள் உங்கள் சொந்த தொழிலில் கவனம் செலுத்தலாம்  என்று கூறினார்.

பிகேஆர் தேர்தல் இயக்குநராகவும் இருக்கும் ரஃபிஸி, இளைஞர்கள் அரசியலில் சேர விரும்பினால் அவர்கள் தூய்மையான எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றார். மக்கள் நலன்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக பணம், அதிகாரம் மற்றும் பதவிகள் பல அரசியல்வாதிகளின் இலக்குகளாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here