ரூ.647 கோடி ரூபாய்க்கு சொகுசு விமானம் வாங்கும் எலான் மஸ்க்.. இதில் இத்தனை வசதிகளா!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார். ஏற்கெனவே ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் தனக்கென ஒரு தனி சொகுசு விமானத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Gulfstream G700 ரக சொகுசு விமானத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் ஆர்டர் கொடுத்துள்ளதாக திடீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தனி விமானம் 2023ஆம் ஆண்டில் எலான் மஸ்கிடம் டெலிவரி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த தனி விமானத்தில் நிறைய இட வசதி மற்றும் சொகுசு அம்சங்கள் இருக்கும் என தெரிகிறது. இந்த விமானத்தில் 19 பேர் அமரலாம். சுமார் 51000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய விமானம்.

இந்த விமானத்தின் ஆரம்பவிலையே 78 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 647 கோடி ரூபாய்க்கு மேல். இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சினில் இயங்கும் இந்த விமானம் ஒரு முறை எரிபொருள் நிரப்பினாலே 7500 நாட்டிக்கல் மைல் (சுமார் 13900 கிலோமீட்டர்) பயணிக்கக்கூடியது.

இந்த விமானத்தில் வைஃபை வசதியும் உள்ளது. தற்போது எலான் மஸ்க் G650ER விமானத்தை பயன்படுத்தி வருகிறார். 2023ஆம் ஆண்டு முதல் புதிய விமானத்துக்கு அவர் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எலான் மஸ்க்கிடம் நான்கு தனி விமானங்கள் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here