நாளை நாள் முழுவதும் மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை- மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், நவம்பர் 4 :

15வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளான நாளை முழுவதும் தீபகற்பம், சபா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், சபாவில் உட்பகுதி, சண்டகான், கூ டாட் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீபகற்பத்தின் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர், சபாவின் மேற்குக் கடற்கரை மற்றும் சரவாக்கில், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பேத்தோங் மற்றும் கபிட் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரவாக்கில், சரிகேய், சிபு, முகா, கபிட், பிந்துலு, மிரி மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான் மற்றும் பேத்தோங் ஆகிய இடங்களில் பிற்பகலில் மழை பெய்யம் என்றும் அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here